அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நியூயார்க் நகரில் இருந்து 199 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது.
துர்க்மெனிஸ்தான் பகுதியில் பறந்தபோது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து விமானம் ரோம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பின்னர், சோதனைக்காக முனையத்திற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விமானம் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 15 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.