சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய அணியின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி ரசிகர்களை குதூகலம் அடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.