ஞானசேகரன் மீதான கொள்ளை வழக்குகளில் அவரை மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அது தொடர்பாக அவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதை தெரிந்துகொண்ட போலீசார், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கொள்ளையடித்த 30 லட்சம் ரூபாய் பணத்தை ஞானசேகரன் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்திருப்பதும், மீதமுள்ள பணம் மற்றும் நகைகளை தனது 3 மனைவிகளுக்கும் அவர் பிரித்து கொடுத்திருப்பதும் விசாரணையில் அம்பலமானது.
அதனைத் தொடர்ந்து காவல் முடிந்து ஞானசேகரனை போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஞானசேகரனை மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.