மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.
மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வந்த பிரதமர் மோடி, மேடையில் அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு நேரத்திலேயே ராஜ்பவனில் இருந்து தான் புறப்பட நேர்ந்ததாகக் கூறிய பிரதமர் மோடி, பள்ளி குழந்தைகள் சரியான நேரத்தில் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே தாமதமாக வந்ததாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஆண்டுகளில் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என தெரிவித்தார். மேலும் உலக நாடுகள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.