அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு தோளில் சுமந்து கொண்டு சென்ற அவலநிலை வறுத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
போலி திராவிட மாடல் ஆட்சியாளர்கள், மலை கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் வாக்கு சேகரிக்க மட்டும் இத்தனை ஆண்டு காலமாக வந்து சென்றது, இதன் மூலம் அறிந்து கொள்ள முடிவதாக எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி எங்கே செல்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள எல்.முருகன், தமிழகத்தில் குவிக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாததன் விளைவே இது போன்ற அவலங்களுக்கு தொடர் சாட்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில் நிலையங்களிலும் இந்தி எழுத்துக்களை அழிப்பதில் மும்முரம் காட்டி வரும் திமுக, அடிப்படை சாலை வசதி இன்றி தவித்து வரும் மலைக் கிராம மக்களின் அவலநிலை குறித்து எள்ளளவும் கவலைப்படாமல் இருந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.