2026 நிதியாண்டுக்குள் 100 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் உரையாற்றினார். தற்போது இந்திய ரயில்வே 97 சதவீதத்திற்கும் அதிகமான மின்மயமாக்கல் எட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
2026 நிதியாண்டிற்குள் ரயில் பாதைகள் 100 சதவீத மின்மயமாக்கலை எட்டும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிலும் விரைவான முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் 2030-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இலக்கு நிரணியக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.