ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் போன்ற பல கொண்டாட்டங்களை எதிர்நோக்குகிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், காசி தமிழ் சங்கமம் ஒற்றுமையைக் கொண்டாடவும், புனித நகரமான காசியின் தெய்வீகத்தை அனுபவிக்கவும் பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி என தெரிவத்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்வில் பங்கேற்றது உற்சாகமும் ஆர்வமும், காசி மற்றும் தமிழகத்தின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த பிரதமரின் பாராட்டத்தக்க முயற்சியின் வெளிப்பாடாகும் என அவர் கூறியுள்ளார்.
காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பதிப்பின் பிரமாண்டமான உச்சக்கட்ட விழா வாரணாசியில் நடைபெற்றதாகவும் இதில் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் மத்திய கல்வி இணையமைச்சர் DrSukanta உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் இதுபோன்ற பல கொண்டாட்டங்களை எதிர்நோக்குகிறோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.