தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாக தெரிவித்தார்.
சிறுமிகள் முதல் மூதாட்டி வரை தினசரி பாலியல் குற்றங்கள் அரங்கேறுவதாகவும், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆளும் கட்சியினரின் உதவியுடன் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும், கையாலாகதனத்தை மறைப்பதற்காக மத்திய அரசின் மீது குறை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தாத்தா வயதுடையவரை அப்பா என்று சொன்னால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்றும் தினகரன் கூறினார்.