பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாசாரத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பது இயல்புதான் என ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கும்ப மேளாவுக்கு எதிராக பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் பகல்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கும்பமேளாவை விமர்சித்த லாலு பிரசாத் யாதவை மறைமுக விமர்சித்தார். பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாசாரத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பதாக கூறிய அவர், இதுவரை கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம் என குறிப்பிட்டார்.