சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
ஜான்சன் பேட்டை பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி தனது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவலர்கள், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவரிடம் விசாரித்ததில், தனது இருதயத்தில் ஓட்டை இருப்பதை அறிந்த கணவர் மற்றும் மாமியார், தன்னை துன்புறுத்தி வீட்டில் இருந்து அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும், இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.