நீலகிரி மாவட்டம், உதகை அருகே மஞ்சனக்கொரை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படும் நிலையில், மஞ்சனக்கொரை பகுதியில் நள்ளிரவு நுழைந்த சிறுத்தை, வீட்டின் வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது.
இந்த சிசிடிவி காட்சி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.