கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழகம் வருகைதரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயண விவரங்கள் வெளியாகியுள்ளது.
இன்றிரவு கோவை விமான நிலையம் சென்றடையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரேடிசன் ப்ளூ என்ற நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவை பாஜக அலுவலகத்தை நாளை திறந்து வைப்பதுடன், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகங்களையும் காணொலி வாயிலாக திறந்துவைக்கிறார்.
அதனைத்தொடர்ந்து நாளை மாலை ஈஷா யோகா மைய வளாகத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக அமித்ஷா கலந்துகொள்கிறார்.
அமித் ஷாவின் வருகையையொட்டி, கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்குமிடம், பீளமேடு கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதி, ஈஷா வளாகம், அமித்ஷா செல்லும் பாதைகள் ஆகிய இடங்கள் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.