மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கும் விதமாக கோவையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாநகர தலைமை அலுவலகத்தின் புதிய கட்டிடம் மற்றும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகிறார்.
அவரை வரவேற்கும் விதமாக மாநகர் முழுவதும் போஸ்டர்கள், கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்களை பாரதிய ஜனதா நிர்வாகிகள் வைத்து உள்ளனர். இந்நிலையில் பீளமேடு பகுதியில் பா.ஜ.க வின் புதிய அலுவலகம் அருகே வைத்து இருந்த வரவேற்பு பதாகைகளை அகற்றிய கோவை மாநகராட்சி ஊழியர்களை கண்டித்து பா.ஜ.க வினர் பீளமேடு காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கோவை-அவிநாசி பிரதான சாலையில் பாஜகவினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.