சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பீர்க்கன்கரணை ஏரிக்கரையில் கஞ்சா புகைத்த பள்ளி மாணவர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், சாமுவேல் மற்றும் தினேஷ் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஆயிரத்து 200 போதை மாத்திரைகள், ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.