திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வைத்த ஃப்ளக்ஸ்களை அகற்றிய போலீசாருக்கும், விழாக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களை வரவேற்கும் விதமாக அப்பகுதியில் ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு வந்த போலீசார் திமுக பிளக்ஸ்களை தவிர பிறவற்றை வைக்கக் கூடாது என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் பிளக்ஸை வைத்ததாக கூறி, அவற்றை போலீசார் அகற்ற முயன்றனர். இதனையடுத்து விழாக் குழுவினருக்கும், போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.