மஹா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி வரும் 28-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்