தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டை ரவுடி போல் பேசியுள்ளார் என்றும் அன்பில் மகேஷ் பேசிய விதம் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு பொற்காலம்; அரசுப் பள்ளிகளுக்கு அல்ல என்றும் அரசுப் பள்ளிகளில் பாலியல் சீண்டல்கள் அதிகமாகியுள்ளது என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
திமுகவுக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுத்தேன் என்றும் தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார்.
விகிதாச்சார அடிப்படையில் அனைத்து மாநிலங்களின் தொகுதிகளும் உயரும் என்றும் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைகிறது என்று முதலமைச்சரிடம் யார் சொன்னார்கள்? அண்ணாமலை கேள்வி எழுப்பினார். மேலும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார் என தெரிவித்தார்.
உங்கள் குழந்தைக்கு 3 மொழி, உங்கள் பள்ளியில் 3 மொழி, ஆனால் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் குழந்தைகளுக்கு 2 மொழியா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.