கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாகையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்டுமான ஒப்பந்ததார்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் கட்டுமான ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து தர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.