தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கோவை அருகே பெரிய தொட்டிபாளையம் அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டம் பெரிய தொட்டிபாளையம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், அண்மையில் புதிதாக 67 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரண்டடுக்கு வகுப்பறைகள் கட்டடம் கட்டப்பட்டது.
ஆனால், இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், கழிவறை கட்டப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுதொடர்பாக கடந்த 14-ம் தேதி நமது தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.
அதன் எதிரொலியாக தற்போது கழிப்பறை கட்டும் பணியினை காரமடை நகராட்சி நிர்வாகம் தொடங்கியிருக்கிறது. பள்ளியில் கழிவறை அமைக்க உதவிய தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.