18-வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், தனது பயிற்சியை தொடங்குவதற்காக சிஎஸ்கே அணி வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார்.
18-வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி தொடங்கி மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில், சிஎஸ்கே அணியுடன் தனது பயிற்சிகளை தொடங்குவதற்காக அந்த அணி வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார். சிஎஸ்கே அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள மகேந்திர சிங் தோனி, ஒரு வீரராக இந்த முறையும் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனியின் சென்னை வருகை அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.