நாடு முழுவதும் 25 இடங்களில் ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தின் தென் பகுதியான ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் கடற்பகுதியும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நாடு முழுவதும் 25 வட்டாரங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 986 சதுர கிலோ மீட்டர் கடற்பகுதிகளும் ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.