நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகாத காரணத்தினால் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டினர்.
சிறிது நேரத்தில் அவருடைய உதவியாளர் சம்மனை கிழித்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது பாதுகாவலருக்கும் போலீசாருககும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றனர். மேலும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.