தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில், சீமான் மீது தெலுங்கர் முன்னேற்ற கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி.எம்.பாரத் , தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்களை வந்தேறி என்று சீமான் தொடர்ந்து பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
சீமான் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாகவும், அவர் மீது வழக்கு பதிய வேண்டும் எனவும், டிஜிபியிடம் பி.எம்.பாரத் கோரிக்கை விடுத்துள்ளார்.