ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீர் மக்களின் உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தான் தலைவர்களும், அதிகாரிகளும் பொய்களை பரப்புவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.
மேலும், சர்வதேச உதவிகளை நம்பி வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு தொடர்ந்து நேரத்தை
வீணடிப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும் அவர் கூறினார்.