நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால், முழுவதும் அகற்றப்பட்டன.
நெல்லை அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள், வளாகத்திற்கு அருகிலேயே கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டது.
இதனால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்தது. மேலும் இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, மருத்துவக் கழிவுகள் அனைத்தையும் இரவோடு இரவாக ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.