மறைந்த சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சிறப்பு சலுகைகளைப் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய திகார் சிறையின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் குமார் குப்தா, திகார் சிறையில் சுப்ரதா ராய் மணிக்கணக்கில் விமான பணிப்பெண்களுடன் நேரம் செலவிட அனுமதிக்கப்பட்டதாகவும், விஸ்கி பாட்டில்கள் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தெரிவித்தும், அவர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்றும் சுனில் குமார் குப்தா தெரிவித்துள்ளார்.