வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய ஜிஎஸ்டி மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜிஎஸ்டி சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 279 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்தாண்டு மே 16 அன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பேலா திரிவேதி ஆகியோர் ஒருமித்த தீர்ப்புகளை வழங்கினர்.
அதில், சுங்கச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்தனர்.
அதாவது, வரிஏய்ப்பு புகாரில் குற்றம் செய்திருப்பார் என்று நம்புவதற்கு போதிய காரணம் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி அதிகாரிகளால் கைது நடடிக்கையை மேற்கொள்ள முடியும் என கூறினர்.
கைது முடிவுக்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜாமினில் வெளிவர முடியாது என்பதை உறுதி செய்த பிறகே, கைது செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
மேலும், மற்ற சட்டங்களில் உள்ளதுபோல், சுங்கச் சட்டத்தின் கீழும், எப்ஐஆர் போடுவதற்கு முன்பு முன்ஜாமின் கேட்டு விண்ணப்பிக்க முடியும் எனவு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.