திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே வீட்டின் மற்றொரு பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்த மெக்கானிக் முகமது யூசுப் என்பவர் மாணவியை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வீட்டில் பதுங்கியிருந்த முகமது யூசுப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.