திருப்பத்தூர் அருகே முன்பக்க டயர் வெடித்து அரசு பேருந்து பழுதாகி சாலையில் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பத்தூரில் இருந்து அதிகாலை சேலம் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டது. சேலம் காமராஜர் வளைவு அருகே வந்தபோது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.
ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், மாற்று பேருந்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்பக்கம் வெடித்த டயரை தொழில்நுட்ப பணியாளர்கள் கழற்றியபோது அது வழுவழுப்பாக இருந்தது தெரியவந்தது. பிறகு ஸ்டெப்னி டயரை மாற்றுவதற்காக எடுத்து வந்தபோது அதுவும் வழுவழுப்பாக இருந்தது.