மதுரை அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புல்லட் பேரணி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகர் தல்லாகுளம் அருகே புல்லட்டில் சென்ற பட்டியலின இளைஞரை மாற்று சமூகத்தினர் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பைக் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு மாநகர் காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று விசிகவினர் பைக் பேரணி நடத்தினர். இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும், அதிக ஒலி எழுப்பியபடியும் சென்றதாகக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விசிகவினர் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.