தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தங்களை மீறி சிப்காட் அமைத்தால், பெரும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், சிப்காட் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சிப்காட் வேண்டாம் என்று ஒருமித்த குரலில் கூறினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் வழங்கினர்.
அப்போது விவசாயி ஒருவர் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறி சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி காலில் விழுந்தபோது, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டக்கூடாது என எச்சரித்தார்.
தங்கள் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் உறுதியளித்ததால், அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.