தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழகம், கேரளா ஆகிய மாநிலகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அகில இந்திய பாஜக ஓபிசி தலைவர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்வி மட்டுமின்றி விவசாயத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரயில்வே துறையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தபட்டுள்ளதாக கூறினார். மேலும், ரயில்வே துறைக்கு மத்திய அரசு ஏரளமான நிதி ஒதுக்கியும், தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.