சென்னையில் சீமான் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் எல்லை பாதுகாப்பு படை அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எல்லை பாதுகாப்புபடை அமைப்பினர், பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
சீமான் வீட்டில் கைது நடவடிக்கையின்போது முன்னாள் ராணுவ வீரருடன் காவல் ஆய்வாளர் அநாகரீகமாக நடந்து கொண்டதை காணொலி வாயிலாக கண்டதாகவும், இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளரை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைது நடவடிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.