திருச்சி மாவட்டம் முசிறி அருகே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் 12 டன் எடையுள்ள மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொட்டியம் அருகே பெரிய பள்ளிபாளையம் பகுதியில் பத்திரக்காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள மரங்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்தவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ஜேசிபி எந்திரம் மூலம் மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, சட்டவிரோதமாக 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 12 என் எடையுள்ள மரங்களை வெட்டிக் கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஜேசிபி இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.