நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குமூலத்தை, நடிகை விஜயலட்சுமியின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, சீமான் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதனை அடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சீமான் வாக்குமூலத்தை நடிகை விஜயலட்சுமியின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த முறை விசாரணையின்போது சீமான் அளித்த வாக்குமூலம், மருத்துவ அறிக்கை, பணப்பரிவர்த்தனை ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.