கர்நாடகாவில் டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொல்லேகல் பகுதியில் இருந்து மாதேஸ்வர மலைக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிக்கிந்துவாடி அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில், காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் 5 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.