நாட்டில் தாய் – சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற சுகாதாரத்துறை மாநாட்டை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சுகாதாரத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து பட்டியலிட்டார்.
பிரசவ நேரத்தின்போது ஏற்படும் தாய் – சேய் மரணம் கணிசமாக குறைந்திருப்பதாக கூறிய அவர், அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.