தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீசைலத்தில் கால்வாய் நீர்ப்பாசன திட்டம் மூலம் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த 22ம் தேதி நீர்க்கசிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், 8 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட நிலையில், முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இதை தொடர்ந்து தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.