அரசியலுக்கு வந்துள்ள விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
தியாகராஜ பாகவதர் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ராம சீனிவாசன் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தவுடன் செயல்படுத்தும் முதல் திட்டமாக விஸ்வகர்மா இருக்கும் என தெரிவித்தார்.
சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பேன் என விஜய் கூறுவது வேடிக்கையாக உள்ளதெனவும் அவர் கூறினார்.