வார விடுமுறை என்பதால் கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாகம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் திற்பரப்பு அருவியில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்தனர். மேலும் அருவியின் அருகே அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்திலும், சுற்றுலா வந்த மாணவ, மாணவிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.