சமயபுரம் மாரியம்மன் மற்றும் உப கோயில்களில் 1 கோடியே 42 லட்சத்து 71 ஆயிரத்து 827 ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டன.
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கையை எண்ணும் பணி, கோய்ல் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கோயில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இறுதியாக சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் உப கோயில்கள் மூலம் 1 கோடியே 42 லட்சத்து 71 ஆயிரத்து 827 ரூபாய் ரொக்கம், 2 கிலோ தங்கம், 3 அரை கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக பிரகாஷ் அறிவித்தார்.