சிதம்பரத்தில், மளிகை கடை மீது காரை மோதவிட்டு, பொருட்களை சேதப்படுத்திய உதவி பேராசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரம் நகரில் வசித்து வரும் பாலச்சந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் வேல்முருகன் என்பவரின் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது கடைக்காரர் உடன் வேல்முருகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு சென்ற பாலச்சந்தர், தனது காரை ஓட்டி வந்து, கடைக்குள் ஆட்கள் இருக்கும் போதே இரண்டு முறை இடித்து, அங்கிருந்த பொருட்களை நொறுக்கி சேதப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.