தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் அரசு பள்ளி மாணவர்களும் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது திமுகவின் வாடிக்கை என அவர் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதான அமைச்சர் சேகர்பாபுவின் விமர்சனத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மகளிருக்கும் வங்கி கணக்கு தொடங்கி தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுவது பிரதமர் மோடியின் லட்சியம் என்றும், புதிய கல்வி கொள்கை மூலம் ஒரே மாதிரியான கருத்துகளோடு மாணவர்கள் கல்வி பயில முடியும் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.