தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, தமிழக தலைவர்கள் வாய் திறந்தது உண்டா என்றும், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை உள்பட பல சம்பவங்களில் கனிமொழியின் கருத்து என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கார்ப்பரேட் கட்சிகளாக மாறிவிட்டதால், கருத்து சொல்ல கூடாது என்றும், கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டிய வேலையை தான் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.