மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத்துவத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனோலயா மனநல மற்றும் மறுவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் என தெரிவித்தார். அவர்களை நாம் ஒதுக்காமல் அரவணைத்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும் அகூறினார்.
ராமேஸ்வரத்தில் கைவிடப்பட்ட மனவளர்ச்சி சவால்களை எதிர்கொள்வோருக்கு வசிப்பிடம், உணவு, மருத்துவ தேவைகள் உள்ளிட்டவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகத்தை உருவாக்கி அவர்களுக்கு உதவும் சில நல்லவர்களின் சமூக முயற்சி வெற்றியடைவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
மனோலயா ஒரு பாராட்டத்தக்க முன்முயற்சி. என்றும், மணிகண்டன், ஜான் பாய் போன்றவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
துரதிருஷ்டவசமாக முன்பெல்லாம் இத்தகைய வசதிகள் இருந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மனநல வளர்ச்சி சவால்களை எதிர்கொள்பவர்களும், கைவிடப்பட்டவர்களும் மற்ற இடங்களிலும் உள்ளதாகவும், நமது சமூக நீதித்துறை அத்தகையோருக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.