சேலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 3 தனியார் மருத்துவமனைகளை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மணல்மேடு, சேலம் டவுண், பெரியபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ, குடும்ப நலத்துறை இணை இயக்குனர் மீனாட்சி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் 3 மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 மருத்துவமனைகளையும் மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.