+ 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று, தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்ற மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இந்தத் தேர்வானது, தங்களது உயர்கல்வி வாழ்க்கைக்கான நல்லதொரு அடித்தளமாக அமைந்திட கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.