வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என்று, தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்க்க பாஜக முயற்சிப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி இருந்தார்.
மேலும், ஒரே மாதிரியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைக் கொண்ட மேற்குவங்கம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பட்டியல்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த நிலையில் வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிலரின் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவா்களின் பிறந்த தேதி, பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிா்க்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தனித்துவமான எண்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.