97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ‘ANORA’ திரைப்படம் 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரை பிரபலங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக “THE BRUTALIST” திரைப்படத்தில் நடித்த ஏட்ரியன் ப்ரூடி சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார்.
சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ORIGINAL SCORE ஆகிய பிரிவுகளிலும் “THE BRUTALIST” திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
ஷான் பேக்கர் இயக்கத்தில் வெளியான “ANORA” திரைப்படம் 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் ‘ANORA’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. “ANORA” திரைப்படத்தில் நடித்த மிக்கி மேடிசன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
அதேபோல, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ‘WICKED’ திரைப்படத்திற்காக பால் டேஸ்வெல் தட்டிச் சென்றார். சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை “THE SUBSTANCE” திரைப்படமும், சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை “DUNE: PART TWO” திரைப்படமும் வென்றுள்ளன.