கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பத்தனாபுரம் பகுதியில் உள்ள முந்திரி தோட்டத்தில் புலி உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து தகவலின் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர், புலியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புலி அளவுக்கு அதிகமாக உணவு அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என கணித்துள்ள வனத்துறையினர், பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் இதனை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.